சிரியா: ஐ.எஸ். வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

371 0

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த ரக்கா நகரின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக ப்ரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த ரக்கா நகரின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.

ப்ரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் ராட்லா மற்றும் கஸ்ராத் கிராமங்களின் சாலைகளில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வான்வழி தாக்குதல் பேருந்துகளை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ரக்கா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் உள்ளூர் வாசிகள் சென்றுக் கொண்டிருந்த பேருந்துகளில் பயணம் செய்த 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆதரவு படையினர் செப்டம்பர் 2014 முதல் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறனர். வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்க படையினர் மற்றும் சிரிய ராணுவத்தினர் ரக்கா பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.