‘‘தேசிய ஜனநாயக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைய தென் மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள்’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி பேசியதாவது: திமுக கூட்டணியில் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி, இரண்டாவது பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.

