அயத்துல்லா அலி காமனேய் மறைவை கண்ணீருடன் அறிவித்த செய்தியாளர்

15 0

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர், அயதுல்லா அலி காமனேய் மரணத்தை கண்ணீருடன் அறிவித்துள்ளார். ஈரான் அதிகாரிகள் அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர், “இஸ்லாமிய புரட்சியின் தலைவர்” என்று குறிப்பிட்டு, மரணம் உறுதி செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், டெஹ்ரான் நகரில் உள்ள எங்ஹெலாப் சதுக்கம் பகுதியில் மக்கள் துக்கம் அனுசரிக்க திரண்டுள்ளனர்.

அந்த சமயத்தில், பலர் காமனேய் படங்களை ஏந்தியிருந்ததுடன் சோக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இமாம் ஹுசைன் திருக்கோயில் மற்றும் கர்பலா பகுதிகளிலும் பக்தர்கள் துக்கம் அனுசரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரான் அரசு, இந்த படுகொலை மன்னிக்கப்படாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ருஹொல்லா கோமெய்னி மரணத்திற்குப் பிறகு காமனேய் கடந்த 1989 முதல் உச்ச தலைவர் பதவியில் இருந்துள்ளார்.

இதன்போது, ஈரான் அரசு 40 நாட்கள் துக்க அனுஷ்டானம் அறிவித்ததுடன், தேசியக் கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு,ஏழு நாட்கள் பொது விடுமுறை நாட்களையும் அறிவித்துள்ளது.