மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1) சுவாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பிரதமரின் வருகையையொட்டி திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் மற்றும் மலைப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு வருகைப் தந்துள்ள பிரதமர் மோடி, புதுச்சேரி பயணத்தை முடித்துக்கொண்டு மதுரைக்குச் சென்றார். அங்கு உள்ள முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் சார்பில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முருகனை தரிசனம் செய்த பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முருகனை வழிபட்ட பிறகு திருப்பரங்குன்றத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகருக்குப் புறப்பட்டார்.

