ஈரானில் பதற்றம்: பிரித்தானிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

22 0

ஈரான் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை பிரித்தானியா தற்காலிகமாக மீள அழைத்துள்ளது .

நேற்று வெளியிடப்பட்ட  அதிகாரப்பூர்வ பயண ஆலோசனையில், ஈரானில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் கடந்த ஜனவரி மாதமே மூடப்பட்ட நிலையில், தற்போது அதிகாரிகள் அனைவரும் வெளியேறியுள்ளனர்.

இனி அங்கிருந்தான பணிகள் தொலைதூர முறை மூலம் மட்டுமே முன்னெடுக்கப்படும்.

பாதுகாப்பு கருதி டெல் அவிவ் நகரில் இருந்த சில அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் இஸ்ரேலுக்குள்ளேயே வேறு பாதுகாப்பான இடங்களுக்கு பிரித்தானியா மாற்றியுள்ளது. (