முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

10 0

சிவில் விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை மார்ச் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, இந்த வழக்கின் முதலாவது சாட்சியாளரை சாட்சியம் அளிப்பதற்காக மார்ச் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்ததுடன், பிடியாணை பிறப்பிக்குமாறும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சாட்சி விசாரணை மார்ச் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் கலந்துகொண்ட தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 03 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை விடுவித்ததன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தி ‘ஊழல்’ புரிந்ததாகக் குற்றம் சுமத்தி, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

5தரமற்ற நிலக்கரி கொள்முதல் ஊழல்: குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சிவில் அமைப்புகள் முறைப்பாடு!
தரமற்ற நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் அதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை (27) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி அதில் தலையிடாதது போலவே, இந்த தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளிலும் தற்போதைய ஜனாதிபதி தலையிடமாட்டார் என தாம் நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, ஐக்கிய ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

குறித்த காலப்பகுதியில் ஒப்பந்த அறிவிப்புகள் கோரப்படுவதில்லை. தரமற்ற அரிசியை இறக்குமதி செய்தமைக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, நாட்டுக்குள் அரிசியை இறக்குமதி செய்ய முடியாமல் போன ஒரு நிறுவனத்திற்கே இந்த நிலக்கரி ஒப்பந்த அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிவு செய்வதற்கு ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவசர கொள்முதல் என்ற போர்வையில் ஊழல் இடம்பெற்றுள்ளமை இப்போது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.