நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக ரஜீவன் எம்.பியிடம் மக்கள் முறைப்பாடு!

18 0

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக குடவத்தை மக்கள் இன்று (27) பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதக்கவும், பொலிஸார் மக்கள் மீது மூர்க்கதனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியிடம் முறையிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நேரடியாக குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் இது குறித்து உரையாடியதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.