முனைக்காட்டில் யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி

16 0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி பலியானார்.

உயிரிழந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.

இந்த காட்டு யானை தாக்குதலுக்குள்ளான இரண்டு பேர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த காட்டு யானை தாக்குதல் காரணமாக 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது