போலி சட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்து பாக். உயர் நீதிமன்றத்தில் 5 ஆண்டு பணியாற்றிய நீதிபதி நீக்கம்

19 0

 பாகிஸ்​தானின் இஸ்​லா​மா​பாத் உயர்​நீதிமன்றத்தில் தாரிக் மஹ்மூத் ஜஹாங்​கிரி என்​பவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்​பர் மாதம் நீதிப​தி​யாக நியமனம் செய்யப்பட்டார். இந்​நிலை​யில் இவரது சட்​டப் படிப்பு சான்​றிதழ் போலி​யானது என கடந்​தாண்டு புகார் வந்​தது.

இதையடுத்து இவர் நீதிப​தி​யாகப் பணி​யாற்ற தடைவிதிக்கப்பட்டு, அசல் சட்​டப் படிப்பு சான்​றிதழ்​களைச் சமர்ப்பிக்க உத்​தர​விடப்​பட்​டது. ஆனால் அவர் சான்​றிதழ்​களைச் சமர்ப்​பிக்​காமல், அவரது வழக்கை கூடு​தல் நீதிப​தி​கள் அடங்​கிய அமர்வு விசா​ரிக்க வேண்​டும் என மனுத்​தாக்​கல் செய்​தார். இதையடுத்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய உத்தர ​விடப்​பட்​டது.

இதையடுத்து கராச்சி பல்​கலைக்​கழக பதி​வாளர் ஆவணங்​களை சமர்ப்​பித்​தார். அதில் தாரிக் மஹ்மூத் ஜஹாங்​கிரி சட்​டப் படிப்பு சான்​றிதழ் போலி​யானது என தெரிவிக்​கப்​பட்​டது. மேலும் இவர் கடந்த 1988-ம் ஆண்டு தேர்வு எழுதும்​போது ஆள்​மாறாட்​டம் செய்து பிடிபட்​ட​வர் எனவும் தெரிவிக்​கப்​பட்​டது.

ஆனால், இவர் இந்த தண்​டனையை ஏற்​காமல், அடுத்​தாண்​டே, இம்​தி​யாஸ் அகமது என்ற மாணவனின் பதிவு எண்ணை பயன்படுத்தி தேர்​வெழு​தி​யுள்​ளதும் தெரியவந்தது. இதையடுத்து இஸ்​லா​மா​பாத் உயர்​நீ​தி​மன்​றம் நேற்று அளித்த தீர்ப்​பில் தா​ரிக் மஹ்மூத் ஜஹாங்​கிரியை நீதிபதி பத​வி​யில் இருந்து நீக்​கி உத்தரவு பிறப்​பித்​தது.