மனித நேய ஈருருளிப்பயணம் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் இன்று மாலை சுவிஸ் சொலத்தூண் நகரைச் சென்றடைந்தது.

23 0

மனித நேய ஈருருளிப்பயணத்தின் 14வது நாளான இன்றைய நாள் பல சவால்களுக்கு மத்தியுலும் பிரான்ஸ் நாட்டை கடந்து இலக்கு நோக்கி விரைகின்றது.
இன்று 25/02/2026 காலை அகவணக்கத்துடன் முல்கவுஸ் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் மாநகர சபைகளில் எமது கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டதோடு தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் இன்று மாலை சுவிஸ் சொலத்தூண் நகரில் நிறைவுபெற்றது.
தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு நாளை காலை இலக்கு நோக்கி பயணிக்கும்.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”

-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”