முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

33 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை ஓய்ந்திருக்கும் நிலையில் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

கடந்த காலங்களிலும் அக்குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்ட போது  மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் உண்டு எனவே இதனைக் கருத்தில் கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக செல்பவர்களும், தமது கால்நடைகள் விடையத்திலும் மிகவும் அவதானத்துன் இருக்குமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.