நாங்கள் யாருக்கும் அடிபணியப் போவதில்லை! புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர்

12 0

இலங்கை தமிழரசுக்கட்சியானது தனது கடமைகளை சரியாகச் செய்கின்றது என புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியினுடைய விதிகளுக்கு அமைவாக உண்மைக்கு புறம்பான விடயங்களை சொல்லக் கூடாது என கட்சியின் பொதுச்செயலாளர் கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, அபிவிருத்தி தொடர்பான விடயங்களை மேற்கொள்ளும் போது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களிடமிருந்து ஏற்படும் அழுத்தங்களுக்கு ஒருபோதும் நாம் அடிபணிய மாட்டோம் எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த காலத்திலே நாம் வளர்ந்தவர்கள். எவ்வாறான அழுத்தங்கள் ஏற்படும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். அழுத்தங்களைக் கண்டு நாம் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை. நாம் மக்களுக்காக சேவையாற்ற வந்துள்ளோம்.

மக்களுக்கான சேவையை நாம் சிறப்புடனும், உகந்த வகையிலும் முன்னெடுக்க உள்ளோம். அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.