ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத் தேர்தலின்போதும் மத ரீதியாக எங்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த எதுவும் உண்மையாக வில்லை. அதனால் பெளத்த மதத்தின் பிரகாரம் எமது அரசாங்கம் மஹா சங்க தேரர்களுடன் செயற்படுகிறது என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற மஹா சங்க சம்மேளனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சம்மேளனங்கள் நடத்துவதற்கு சட்ட ரீதியிலான பூரண அதிகாரம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அந்த சம்மேளனம் தனிப்பட்ட குறுகிய நோக்கத்துக்காக நடத்துவதாக இருந்தால், அந்த சம்மேளனத்தின் நோக்கம் நிறைவேறப்போவதில்லை. யாரையாவது எதிர்ப்பதற்கு அல்லது யாருக்காவது எதிராக சம்மேளனம் நடத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை.
ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத் தேர்தலின்போதும் எங்களுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் மத ரீதியாக எங்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட எந்த குற்றச்சாட்டாவது உண்மையாகி இருக்கிறதா என கேட்கிறோம். அரசியலமைப்பின் 10ஆவது உறுப்புரையை இல்லாமலாக்குவதாக தெரிவித்தார்கள். மஹநாயக்க தேரர்களை கொலை செய்வார்கள், விகாரைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும், கண்டி பெரஹராவை நிறுத்துவார்கள் என இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் எமக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கண்டி தலதா மாளிகையில் புனிதத்தந்தம் மக்களுக்கு காட்சிப்படுத்தி இருந்தோம். அதேபோன்று இந்தியாவில் இருந்து கொண்டுவந்து கங்காராம விகாரையில் புனித தந்ததம் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தோம். இதற்கு மேலதிகமாக தித்வா புயலால் பாதிக்கப்பட்ட விகாரைகளை நிர்மாணித்துக்கொடுத்திருக்கி
அதுமாத்திரமின்றி, ஏனைய மதத்தவர்களுக்கும் முறையாக அதானிப்பு மற்றும் முறையான கெளவத்தை அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் வழங்கி இருக்கிறோம். அதனால் எமது அரசாங்கம் அனைத்து மதங்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அவ்வாறு இருக்கையில் குறுகிய நோக்கத்துடன் செயற்படுபவர்கள் சிலரும் இருக்கலாம். அவர்கள் தொடர்பில் கவலையடைவதே தவிர அவர்களுடன் மோதல் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்கு தேவையில்லை. பெளத்த மதத்தின் பிரகாரம் எமது அரசாங்கம் மஹா சங்க தேரர்களுடன் செயற்படுகிறது என்றார்.

