யகமவில் இருந்து டயகம மேற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

