கோவை, கருமத்தம்பட்டியில் தி.மு.க இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு எழுச்சியுடன் தொடங்கியது.இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
மாநாட்டில் பேசிய உதயநிதி, “West-இலும் தி.மு.க.தான் Best. தமிழ்நாட்டளவில் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட நம் இளைஞர் அணியை கழகத்தின் இராணும் என்று போற்றிடும் வகையில் நம் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சியும் செய்திடாத வகையில், இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பை மாநாடு போல நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் பூத் கணக்கே தெரியாத கட்சிகளுக்கு இடையில், நாம் அனைத்து பூத்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த சிறப்பு வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.
இந்திய அளவில் பா.ஜ.க.விற்கு எதிரான ஜனநாயகப் போரை, நம் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னெடுக்க வேண்டும் என்று மற்ற மாநில தலைவர்களும் வலியுறுத்த தொடங்கிவிட்டனர்.Main Match விளையாடுவதற்கு முன்பு Net Practice செய்வதுபோல, கழகத்தில் பணியாற்றுவதற்கு தயாராகும் வகையில் இளைஞர் அணியினர் களப்பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது தாய்க் கழகத்தில் பணியாற்றுவோரும், இளைஞர் அணியிலிருந்து வந்தவர்கள்தான்.கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனால், மகளிர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
அதே வேளையில் அடிமைகள் மிகுந்த அதிர்ச்சியில் திகைத்தனர்.மக்களிடம் உள்ளதை அபகரிக்கக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. மக்களுக்கு நலத்திட்டங்களை அளிக்கும் ஆட்சி நம் திராவிட மாடல் ஆட்சிமுதலில் பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க.வை அடகு வைத்தார், பிறகு குத்தகைக்கு விட்டார், தற்போது மொத்த கட்சியையே விற்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தனது சுயலாபத்திற்காக அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார் பழனிசாமி.ஒன்றிய பட்ஜெட்டை முழுமையாக வாசித்து முடிப்பதற்கு முன்பே, டயர் புகழ் பழனிசாமி அதைப் பாராட்டி ஃபயர் விடுகிறார். முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்போம்.. இப்போது மோடிக்கு முரட்டு அடிமையாக இபிஎஸ் இருக்கிறார்.தமிழ்நாட்டில் வாலாட்ட முயற்சிக்கும் பா.ஜ.க.வின் கலவர அரசியல் ஒருபோதும் எடுபடாது. சங்கிக்கூட்டத்தின் முகத்தில் மக்கள் கரி பூசுவது உறுதி ” என்று தெரிவித்தார்.

