தீவிர வலதுசாரி ஆர்வலர் குவென்டின் டெரான்க் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று பிரெஞ்சு நகரமான லியோனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தியுள்ளனர்.தீவிர வலதுசாரி ஆர்வலர் குவென்டின் டெரான்க் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று பிரெஞ்சு நகரமான லியோனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தியுள்ளனர்.இந்த நிலையில், தீவிர வலதுசாரி மற்றும் பாசிச எதிர்ப்பு குழுக்கள் இரண்டும் செறிந்து வாழும் லியோன் நகரில் நடைபெறும் பேரணி வன்முறையாக மாறக்கூடும் என்ற நிலை உருவானது.இதனிடையே, பேரணி முன்னெடுக்கப்படுவதற்கு முன்னதாக சனிக்கிழமை காலை பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அமைதி காக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்,
மேலும் அடுத்த வாரம் அனைத்து வன்முறைக் குழுக்கள் குறித்தும் அமைச்சர்களுடன் ஒரு சந்திப்பை நடத்துவதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில், 23 வயதான குவென்டின் டெரான்க் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்சின் சார்லி கிர்க் தருணம் என முன்னாள் பிரதமரான Dominique de Villepin குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க கன்சர்வேட்டிவ் ஆர்வலரான சார்லி கிர்க் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையே பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பேரணியில் ஈடுபட்ட பலர் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு, குவென்டினுக்கு நீதி வேண்டும் என்றும் ஆன்டிஃபா படுகொலை எனவும் முழக்கமிட்டனர்.
குவென்டின் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏழு பேர் மீது தற்போது முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக குவென்டின் டெரான்க் கொலை தொடர்பில் பேரணி முன்னெடுக்கப்படுவதை லியோன் மேயர் கிரிகோரி டூசெட் தடுக்க முயன்றார்.

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தீவிர வலதுசாரி குழுக்கள் இந்த நிகழ்விற்காக லியோனுக்கு பயணிக்க வேண்டும் என்ற அழைப்புகள் குறித்து தாம் கவலைப்படுவதாகக் கூறினார். உள்ளூர் அதிகாரிகளின் தகவல்படி, லியோன் பேரணியில் சுமார் 3,200 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

