அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலான ´பெண்கள் வலுவூட்டல்´ கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) யாழில் நடைபெற்றது.
இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் சபை மற்றும் ஜனநாயக ஆளுகையையும் பொறுப்புக் கூறலையும் பலப்படுத்தும் கருத்திட்டம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த செயலமர்வில், அமைச்சர்களான சந்திராணி பண்டார, விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இலங்கை நல்லாட்சி மற்றும் தாக்கப்படக் கூடிய மக்கள் தொகைக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் டானியல் றெய்வ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்தரங்கின் ஆரம்பத்தில் ஓரிரு தினங்களாக தென் மாகாணத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 25 வீத பிரதிநிதித்துவம் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

