கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

9 0

காலி – நெலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யத்தேஹிகந்தவத்த பகுதியில் நேற்று சனிக்கிழமை (21) காலை இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மொரவக்க பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த பெண், உயிரிழந்தவரின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலவி வந்த நிலத்தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 49 வயதுடைய சந்தேகநபர் நெலுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக மொரவக்க வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது. நெலுவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.