தெவிநுவர துப்பாக்கிச் சூடு:காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

11 0

மாத்தறை – தெவிநுவர பகுதியில், பல்பொருள் அங்காடி நிலையம் ஒன்றிற்கு அருகில் இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினரால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

09 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

‘டிலைட்’ என அழைக்கப்படும் 55 வயதுடைய மீன் வியாபாரி ஒருவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.