இன்றயை தினம் மனிதநேய ஈருருளிப் பயணமானது லண்டாவ் நகரை சென்றடைந்தது.

28 0

மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 12 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய ஈருருளிப் பயணமானது நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாட்டைத் தொடர்ந்து லக்ஸ்சம்பூர்க்கில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் மனு கையளித்ததை தொடர்ந்து ஈருருளிப் பயணமானது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இன்றயை தினம் காலை 8.00 மணிக்கு டில்லிங்கன் நகரில் ஆரம்பித்து சார்புரூக்கன் நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து மாலை 18.30 மணி்க்கு லண்டாவ் நகரை சென்றடைந்தது.
நாளைய தினம் கால்சுகே நகரை நோக்கி பயணிக்கும்.