’புனித ரமழான்’ நோன்பு இன்று ஆரம்பம்

4 0

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று முதல் தமது புனித ரமழான் நோன்பினை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்டி நோன்பு மாதம் இன்று வியாழக்கிழமை (19) முதல் ஆரம்பமாகிறது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமை குறித்து கிடைக்கப்பெற்ற ஆதாரபூர்வமான தகவல்களைத் தொடர்ந்து, கொழும்பு பெரியபள்ளிவாசலின் பிறைக் குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது