இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

7 0

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடியாகர்கள் 12 பேர் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை (19) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  ஊர்காவற்றுறை நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது