பிரித்தானிய துணைப் பிரதமர் வந்தடைந்தார்

16 0

ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானிய) துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (17)  காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவருடன் அந்நாட்டு துணைப் பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் 07 பேர் வருகை தந்துள்ளனர்.

அவர்களை வரவேற்பதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வந்திருந்தனர்.

டேவிட் லாமி உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை (17) மாலை மீண்டும் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.