ஹீத்ரோ, கேட்விக்-இல் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது

286 0

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு எங்களது சேவைகளை சர்வதேச அளவில் பாதித்துள்ளன என தெரிவித்துள்ளது.
மேலும் தொழில்நுட்ப கோளாறு மூலம் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளிடம் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் மன்னிப்பு கேட்டுள்ளதோடு மிகப்பெரிய சைபர் தாக்குதல் சார்ந்த தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் கணினிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் அல்லது அவர்கள் வழங்கிய பணம் திரும்ப வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் 18.00 மணி (இந்திய நேரப்படி இரவு 10.30) வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் அனைத்து விமானங்களும் ரத்து செய்வதாகவும், பயணிகள் ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளது. ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் கால் சென்டர்கள், இணையத்தளம் மற்றும் செயலி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளது.
ப்ரிட்டிஷ் ஏர்வேஸ்-இன் அனைத்து சேவைகளையும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாது என விமான போக்குவரத்து நிபுணரான ஜூலியன் பிரே தெரிவித்துள்ளார். மேலும் இந்த கோளாறு மிகவும் சிக்கலான ஒன்று, இதை எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகளை ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் மேற்கொள்ள வேண்டும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.
ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் முடங்கியுள்ள நிலையில் மற்ற விமான நிறுவனங்களின் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.