களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

8 0

களுத்துறை வடக்கு, வாடியமன்கடை பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு அருகில் இன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.