மன்னார் கடற்பரப்பில், போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, குறித்த படகில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படகில் சந்தேகிக்கப்படும் இரண்டு பைகளில் 50 கிலோகிராமை விட அதிகமான ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படகும் சந்தேகநபர்களும் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

