சிறுவயதில் செய்த குறும்பு: சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தடையாக அமையுமா?

11 0

சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்த இளம்பெண்ணொருவர் ஒருவர் சிறுவயதில் செய்த குறும்புகளை காரணம் காட்டி அவருக்கு சுவிஸ் குடியுரிமை நிராகரிக்கப்பட்டது.

அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் அந்த இளம்பெண்.

சிறுவயதில் செய்த குறும்பு

எரித்ரியா நாட்டவரான 23 வயது இளம்பெண்ணொருவர் சுவிஸ் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தார்.

சிறுவயதில் செய்த குறும்பு: சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தடையாக அமையுமா? | Swiss Court Deny Citizenship For Teen Pranks

ஆனால், அவர் 15 வயதாக இருக்கும்போது, மற்ற சிறுபிள்ளைகளுடன் சேர்ந்து வீடு ஒன்றின் மீது முட்டைகளை எறிந்ததையும், அந்த வீட்டின் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்துவிட்டு ஓடிவிட்டதையும் சுட்டிக் காட்டி அவருக்கு குடியுரிமை வழங்க Aargau குடியுரிமை ஆணையம் மறுத்துவிட்டது.அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நிர்வாக நீதிமன்றம், ஒரு சிறுமி சிறுவயதில் சக சிறுவர்களுடன் சேர்ந்து செய்த குறும்புக்காக அவருக்கு குடியுரிமை வழங்குவதை மறுக்கமுடியாது என தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், ஆணையம் அவருக்கு குடியுரிமை வழங்க மறுப்பு தெரிவிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன் இந்த விடயங்கள் நடந்துள்ளன என்றும், அதை மட்டும் காரணம் காட்டி அவருக்கு குடியுரிமை வழங்குவதை மறுக்கமுடியாது என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.