பிரான்சை ஆக்ரோஷ புயல் ஒன்று தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, 450,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
Nils என பெயரிடப்பட்டுள்ள அந்த புயலின் ஆக்ரோஷத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள தென் பிரான்ஸ் மக்கள், இப்படி ஒரு பயங்கர புயலை இதற்கு முன் பார்த்ததில்லை என்கிறார்கள்.
இரவெல்லாம், கூரைகள் மீது காற்று மோதும் சத்தத்தையும், குப்பைத் தொட்டிகள் உருளும் சத்தத்தையும் கேட்டுக்கொண்டே இருந்தோம் என்கிறார் ஒருவர்.
இதற்கிடையில், புயலால் மரம் ஒன்று விழுந்து ட்ரக் ஒன்றின் கண்ணாடியைத் துளைத்துக்கொண்டு சென்றதில் அந்த ட்ரக்கின் சாரதி பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.புயல் காரணமாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு சுமார் 900,000 வீடுகள் இருளில் மூழ்கிய நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும், சில சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், பாதி வீடுகளுக்கான மின் சேவை மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

