வவுனியா மாவட்டத்தில் கற்றல் உபகரணங்கள் Help for smile அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது.

16 0

09/02/2026. வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணி பிரதேசத்தின் வேலங்குளம் கிராமம், புளியங்குளம் பிரதேசத்தின் சன்னாசிப்பரந்தன், மற்றும் வவுனியா யேசுபுரம்,நொச்சிமோட்டை மரக்காரன்பளை,மகாறம்பைக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிகவும் வறுமைக்குட்பட்ட மற்றும் கடந்த இயற்கை அனர்த்தத்தின் போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கற்றல் உபகரணங்கள் அனைத்தையும் இழந்த மாணவர்கள் தெரிவுசெய்யப் பட்டு105 (நூற்று ஐந்து)மாணவர்ளுக்கான கற்றல் உபகரணங்கள்”கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் பேராதரவில் Help for smile அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது. இதில் பொத்தகப்பை, கொப்பி, கணித உபகரணப்பெட்டி, பென்சில், பேனா, அழிப்பான், சீவுளி என்பன அடங்குகின்றன. இவ் உதவியை வழங்கிய ஜேர்மன்வாழ் தமிழ்மக்களுக்கும் இதனை ஒழுங்குபடுத்தி வழங்கிய help for smile அமைப்பினருக்கும் வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தங்கள் அன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.