ரணிலின் செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

12 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் விளக்கமறியல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் புதன்கிழமை (11) அன்று பிறப்பிக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமன் ஏக்கநாயக்க, புதன்கிழமை (11) அன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள

ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சமன் ஏக்கநாயக்கவை கைது செய்வதற்காக ஜனவரி (27) அன்று அவரது வீட்டிற்கு சென்றிருந்த போது, சமன் ஏக்கநாயக்க வீட்டில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.

பின்னர் சமன் ஏக்கநாயக்க ஜனவரி (28)  அன்று நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.