கொஸ்கம விபத்தில் பலர் காயம்

14 0

இரத்தினபுரியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று கொஸ்கம பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (9) காலை, விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.