இலங்கை வரவுள்ள ஐ.எம்.எவ் முகாமைத்துவ பணிப்பாளர்

14 0

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5 ஆம் மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.