ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்கள் பட்டியலில் 2 ஆவது இடத்தில் நுவரெலியா

8 0

ஆசியாவில் கட்டாயம் சென்று பார்வையிட வேண்டிய மலைப்பிரதேசங்களின் பட்டியலில் இலங்கையின் நுவரெலியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பிரபல சுற்றுலா இணையத் தளமான அகோடா இந்தத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் மலையகப் பகுதியில் அமைந்துள்ள நுவரெலியா, “குட்டி இங்கிலாந்து” (Little England) என்று அழைக்கப்படுகிறது.

அகோடா நிறுவனம் நுவரெலியாவைத் தெரிவு செய்ததற்கான முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளது:

தேயிலைத் தோட்டங்கள்: கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான தேயிலைத் தோட்டங்கள்.

காலனித்துவ கட்டிடக்கலை: பிரித்தானியர் ஆட்சிக்காலத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள்.

இதமான வானிலை: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் குளிர்ச்சியான மற்றும் இதமான வானிலை.

ஆசியாவின் இயற்கை அழகு மற்றும் கலாச்சாரச் சிறப்புகளைக் கொண்ட இடங்களை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில் முதலிடத்தை இந்தியாவின் சிம்லா (Shimla) பிடித்துள்ளது.

நுவரெலியாவைத் தொடர்ந்து ஆசியாவின் புகழ்பெற்ற ஏனைய மலைப்பிரதேசங்களும் இந்தப் பட்டியலில்இடம்பிடித்துள்ளன:

01.சிம்லா – இந்தியா

02.நுவரெலியா – இலங்கை

03.கேமரன் ஹைலேண்ட்ஸ் – மலேசியா

04.சாப்பா (Sapa) – வியட்நாம்

05.பான்டுங் (Bandung) – இந்தோனேசியா

06.திம்பு (Thimphu)- பூட்டான்

07.மூணார்இந்தியா8டலாட் (Dalat) – வியட்நாம்

அமைதியான சூழலில் ஓய்வெடுக்கவும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை ரசிக்கவும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுவரெலியா ஒரு சிறந்த இடமாகத் தொடர்ந்து திகழ்வதாக அகோடா தெரிவித்துள்ளது.