வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு!

6 0

கந்தானை – வீதி மாவத்தை பகுதியில், வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று வியாழக்கிழமை (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் இந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டுபாயில் கைது செய்யப்பட்டு, அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தியதில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.