வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூவர் கைது

14 0

சுமார் 1 கோடி 28 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய  வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள்  கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர், வியாழக்கிழமை (05) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு,கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61,42 மற்றும் 18 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சஜா நகரிலிருந்து ஏர் அரேபியா விமானம் G.9587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

மூவரும் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளிலிருந்து பிளாட்டினம், மான்செஸ்டர் மற்றும் பென்சன் & ஹெட்ஜஸ்  சிகரெட்டுகள் 85,800  அடங்கிய 429 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைக்காக புதன்கிழமை (11) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.