அநுராதபுரம் – மாத்தளை சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) மதியம் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
மிஹிந்தலையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த பெண் மீது மோதியதில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மற்றும் பாதசாரி பெண் ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் எவும், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

