கங்காராமய விகாரையில் புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம்

15 0

கொழும்பில் உள்ள கங்காராமய விகாரையில், இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை (04) கொண்டுவரப்படவுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சிக்காக சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ள புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வியாழக்கிழமை (04) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (11) வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வின் போது பாதுகாப்பான மற்றும் சுமூகமான அனுபவத்தை உறுதி செய்வதற்காக பக்தர்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பொலிஸ் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும், பல வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன் சுற்றியுள்ள பகுதிகளில் கனரக வாகன போக்குவரத்து தடைசெய்யப்படும் என பொலிஸ் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.