அடுத்த 36 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

18 0

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வடக்கு, வடத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா, வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யுக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது