தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 8 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

