இலங்கையில் 3.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

17 0

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் 3.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடற் பகுதிக்கருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது