“சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை தமிழக அரசு பிடித்தம் செய்திருக்கிறது. அநீதியைக் களையக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு மீண்டும் மீண்டும் அநீதி இழைப்பது கண்டிக்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 35 நாள்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை தமிழக அரசு பிடித்தம் செய்திருக்கிறது. பல ஆசிரியர்களின் ஊதியத்தில் 80% வரை பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநீதியைக் களையக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு மீண்டும் மீண்டும் அநீதி இழைப்பது கண்டிக்கத்தக்கது.

