நல்லாட்சிஅரசாங்கம் வடக்கில் புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும் – விஐயகலா மகேஸ்வரன்

284 0
வல்வெட்டி துறை  குரல் ஆனந்தன் நினைவாக கட்டப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.குறிப்பாக வலிவடக்கில் சீமெந்து தொழிற்சாலை மீள இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே போல் பரந்தன் இராசாயன தொழிற்சாலை மற்றும்  உப்பளம் அதேபோல் பல தொழிற்சாலைகள் யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் இருக்கின்றன.
வடக்கிலிருந்து தெற்கிற்கு இளைஞர் யுவதிகளை   வேலை வழங்குவதாக அழைத்து செல்லாது  இங்கேயே  வடக்கிலேயே எத்தனையோ தொழிற்சாலைகளை ஆரம்பிக்கலாம் என தெரிவித்த அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன்   மேலும் கருத்து தெரிவிக்கையில்.இந்த நல்லாட்சி அரசாங்கமானது வடக்கில் உள்ள தொழிற்சாலைகளை மீள இயக்க கூடுதலான நிதிகளை வழங்க வேண்டும் குறிப்பாக வடக்கில் ஊடகவியலாளர்கள் குறைந்த ஊதியத்துடனேயே பணியாற்றுகிறார்கள் இவர்களுக்கு இலகு கடன்கள் மற்றும் நன்கொடைகள் வழங்கப்படவேண்டும் இவர்கள் கடந்த வருடம் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளுக்குரிய கடன் தொகையை செலுத்துவதில் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.
அத்தோடு போர்காலத்தில் ஊடகவியலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் நினைவாக நினைவுத்தூபியும் அமைக்கப்படவேண்டும் ஆனந்தன் குமரன் எவ்வாறு நினைவு கூரப்படுகிறாரோ அதேபோல் இந்த இறந்த ஊடகவியலாளர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்..இந்த மண்ணை சேர்ந்த மக்கள்  எமக்களித்த வாக்கின் மூலம் தான் நாம் பாராளுமன்றம் செல்ல முடிந்தது.எனவே மக்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று கொடுக்கவேண்டும் மக்களுக்கு விடுதலையை பெற்று கொடுக்க வேண்டியது எமது பொறுப்பு என தெருவித்த விஐயகலா மகேஸ்வரன்..யாழில் கல்வி மான்கள் பாதிக்கப்படுகிறார்கள் குறிப்பாக அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த துணைவேந்தர் தெரிவில் பேரவை உறுப்பினர்களின் வாக்கில் முன்னிலை பெற்ற துணைவேந்தர் சில வாதிகளின் செயற்பாட்டால் புன்தள்ளப்பட்டுள்ளார்கள்..
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த செயற்பாட்டை ஏற்று கொள்ள முடியாது.வாக்கெடுப்பில் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட துணைவேந்தர் அரசியல் வாதிகளின் செயற்பாட்டால் அவர் புறந்தள்ளப்பட்டுள்ளார்…பல கல்விமான்கள் யுத்த காலத்தில் இங்கிருந்து வெளியே சென்றனர்.எனினும் தற்போது சில அரசியல் வாதிகள் இரசிடம் பிச்சை எடுக்கும் செயற்பாட்டில் பல கல்வி மான்கள் வெளியே செல்ல இந்த நல்லாட்சி அரசு இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்தார்