ஹபரணையில் ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
ஏறாவூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சை ஒன்றுக்காக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது ஹபரனை பகுதியில் வைத்து குறித்த ஆம்புலன்ஸ் வாகனம் எரிபொருள் நிரப்பும் வாகனத்துடன் மோதியுள்ளது.
இதில் ஆறு பேர் பயணித்துள்ள நிலையில் இருவர் காயமடைந்து பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் உவைஸூம் காயமடைந்துள்ளார்

