கிளிநொச்சியில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது, கிளிநொச்சி – பரந்தன் ஏ35 வீதியில் நிகழ்ந்துள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

