வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்றுவதற்கான சதியில் தொடர்புடைய அதிகார வெறி பிடித்த தேசவிரோதி முகம்மது யூனுஸ்” என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் வரும் பிப்.12-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. எனினும், தேர்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், வங்கதேச தேசியவாத கட்சி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஜமாத் இ இஸ்லாமியும் கணிசமான இடங்களைப் பெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு ஷேக் ஹசீனா ஆற்றிய உரையின் ஆடியோ பதிவு, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்டது.

