பிரான்சில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: சர்ச்சைக்குரிய பால் பவுடர் காரணமா?

11 0

பிரபல உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனம், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது நிறுவனத் தயாரிப்பான குழந்தைகளுக்கான பால் பவுடரை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அந்த பால் பவுடரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாலை அருந்திய இரண்டு குழந்தைகள் பிரான்சில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.உயிரிழந்த குழந்தைகளில் ஒன்று, Guigoz என்னும், நெஸ்ட்லே நிறுவனத் தயாரிப்பான பால் பவுடரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாலை அருந்தியது உறுதியாகியுள்ளது.

மற்றொரு குழந்தை என்ன பாலை அருந்தியது என்பது தெரியவில்லை.

இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்புக்கும் பால் பவுடருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அறிவதற்காக பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், குழந்தைகளின் உயிரிழப்புக்கும் பால் பவுடருக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது