கல்லடி பாலத்திலிருந்து குதித்த யுவதி சடலமாக மீட்பு

16 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பாலத்தில் பாய்ந்த யுவதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார், இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (23) அன்று இரவு 8 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தாளங்குடா சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த20 வயது மதிக்கத்தக்க யுவதியே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. குறித்த யுவதியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத ப‌ரிசோதனை‌க்காக வைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸா0ர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்