வெடிக்காத நிலையில் இரண்டு குண்டுகள் மீட்பு

16 0

கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம்  கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத ஷெக் குண்டுகள் நேற்றுக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே, இரண்டு 60 மில்லி மீற்றர்  வெடிக்காத குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.

பின்னர் அவர்கள் அத்ய் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குவருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் அந்த இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியமையுடன் இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.