270 கிலோகிராம் ஐஸூடன் சிக்கிய படகுகள்

10 0

தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் அதிக போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (PNB) இணைந்து  கைப்பற்றியுள்ளனர்.

குறித்த படகுகளை சோதனை செய்தபோது, ​​படகுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 270 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (‘ஐஸ்’) மற்றும் ஹெராயின் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

இது குறித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.