“தேர்தல் ஆணையம் நமக்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். வருகிற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.

